பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை சரிவு

பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை சரிவடைந்தது.

Update: 2022-03-23 17:50 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைகளில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்து வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 1,041 கிலோ தேங்காய்களை ‌விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.30.50-க்கும், குறைந்த பட்சமாக ரூ.24-க்கும், சராசரியாக ரூ.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.29 ஆயிரத்து 910-க்கு வர்த்தகம் நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த ‌ஏலத்திற்கு 3 ஆயிரத்து 94 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.30.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ25-க்கும், சராசரியாக ரூ.‌28-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.89 ஆயிரத்து 957-க்கு வர்த்தகம் நடந்தது. தேங்காய் வரத்து அதிகரிப்பால் விலை சரிவடைந்துள்ளதாக‌ வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்