நாமக்கல்லில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 9¾ பவுன் நகைகள் திருட்டு
நாமக்கல்லில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் பூட்டை உடைத்து 9¾ பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல்:
கம்ப்யூட்டர் என்ஜினீயர்
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் கடந்த 21-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கணேசபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் காலை மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 9¾ பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பது தெரியவ்ந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து ரமேஷ்குமார் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமார் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு, அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.