நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-03-23 17:49 GMT
நாமக்கல்:
நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் நேற்று நாமக்கல் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதையொட்டி கலைக்குழுவினர் கரகாட்டம், நாடகம், தப்பாட்டம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் எமதர்மன் வேடம் அணிந்த நபர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து நோட்டீசு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
அப்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன், உமா மகேஸ்வரி மற்றும் அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்