ராயக்கோட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
ராயக்கோட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் உத்தனப்பள்ளி போலீசார் அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக ராயக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் (வயது 60,) சானபோகனப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் (35), உத்தனப்பள்ளி பாலாஜி நகரை சேர்ந்த லட்சுமிபதி (60) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.