அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் குறித்து ஆலோசனை
அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் குறித்து ஆலோசனை நடந்தது.
கரூர்,
கரூரில், மத்திய மாநில பொதுத்துறை மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் சக்திவேல், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.