27,102 பேருக்கு நகை கடன் தள்ளுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 27,102 பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.;
ராமநாதபுரம்,
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பணி யாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் ஆகியவற்றில் 5 பவுனுக்கு உட்பட்டு கடன் பெற்றுள்ள பயனாளிகளில் தகுதியின் அடிப்படையில் 27,102 பேருக்கு ரூ.111.91 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. எனவே மொத்த எடை 5 பவுனுக்கு உட்பட்டு கடன் பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தை அணுகி கடன் தள்ளுபடி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.