சைக்கிள் மீது லாரி மோதல்; முதியவர் பலி
திண்டுக்கல்லில், சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவர் பலியானார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஜோசப் காலனியை சேர்ந்தவர் மார்ட்டின் துரைராஜ் (வயது 70). இவர் நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய மார்ட்டின் துரைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.