நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் பணிச்சுமையை குறைக்கக்கோரி நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-03-23 17:10 GMT
தேனி: 

தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பில், நில அளவை களப் பணியாளர்களுக்கு பணிச்சுமையை குறைக்க வேண்டும், உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நில அளவையர்கள்  வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். 

தேனி மாவட்டத்தில் 49 நில அளவையர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 42 பேர்  வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நாளை மறுநாள்  (வெள்ளிக்கிழமை) வரை தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நில அளவையர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் செல்வரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் நில அளவை பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்