டெம்போவில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குளச்சல் அருகே டெம்போவில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை துணை போலீஸ் சூப்பிரண்டு பறிமுதல் செய்தார்.;

Update: 2022-03-23 17:09 GMT
குளச்சல்:
குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் நேற்று முன்தினம் இரவு குளச்சல் பகுதியில் ரோந்து சென்றார். குளச்சல் அருகே உள்ள கோடிமுனை பகுதியில் செல்லும் போது, அங்குள்ள ஒரு ஆலயத்தின் அருகில் சந்தேகப்படும் வகையில் கூண்டு அமைத்த ஒரு வேன் நின்று கொண்டிருந்தது.
உடனே, துணை சூப்பிரண்டு அந்த வேனை ேசாதனை செய்தார். அப்போது, அதில் சிறு சிறு மூடைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்ததும், அதை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்து குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக வேன் டிரைவரான களியக்காவிளை மலையடியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, வேன் ஆகியவை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்