சங்கராபுரம் அருகே எள் விதைப்பண்ணை வயல் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு

சங்கராபுரம் அருகே எள் விதைப்பண்ணை வயல் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு

Update: 2022-03-23 16:48 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில் எள் ஆதார நிலை விதைப்பண்ணை வயலில் விழுப்புரம் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வயல்களில் அமைக்கப்பட்டிருந்த நெல் விதை பண்ணை வகைகளை ஆய்வு செய்து, நெல் விதைப் பண்ணைகளில் தரமான விதை உற்பத்தி செய்தல், கலவன் நீக்குதல் போன்ற வழிகாட்டுதல்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். மேலும், பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் தேவையான பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது விதைச்சான்று அலுவலர் செல்வமணி, உதவி விதை அலுவலர்கள் முருகேசன், துரை ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து சோழம்பட்டு, அரசம்பட்டு, பழையனூர், செம்பராம்பட்டு கிராமங்களில் உள்ள விதைப்பண்ணைகளை கதிரேசன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்