கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா
கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி செயலாளர் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.