சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்
சங்கராபுரம்
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பொது சேவை அமைப்பு மற்றும் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்ததான முகாம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் சிவகங்கா தலைமை தாங்கினார். துணை முதல்வர் லலிதா, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், பொதுசேவை அமைப்பு நிர்வாகிகள் ஜோசப் சீனிவாசன், சுதாகரன், வக்கீல் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சம்பத்குமார் ரத்த தானத்தின் அவசியம், உபயோகம் குறித்து விரிவாக பேசினார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கல்லூரி மாணவர்களிடம் 84 யூனிட் ரத்தம் தானமாக பெற்றனர். இதில் டாக்டர்.ஆரிபுல்லா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பொதுசேவை அமைப்பு நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.