கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்

Update: 2022-03-23 14:19 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில் நிலையம் மற்றும் இளையரசனேந்தல் ரோடு இடையே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் சிவப்பு சட்டை, காவி நிறத்தில் வேட்டி, பச்சை நிற துண்டு அணிந்திருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்