குன்றத்தூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
குன்றத்தூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்
பூந்தமல்லி,
குன்றத்தூர் அடுத்த கரைமா நகர் மேட்டு தெருவில், தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நடை நேற்று முன்தினம் இரவு சாமி தரிசனம் முடிந்ததும் அடைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க வந்துபோது, கோவிலில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். உண்டியலில் சுமார் ரூ.5 ஆயிரம் வரை பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.