வேலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம்

வேலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடந்தது.;

Update: 2022-03-23 12:42 GMT
வேலூர்

வேலூர் ரங்காபுரத்தில் உள்ள வேலூர் மண்டல அரசு போக்குவரத்து பணிமனை கழகம் முன்பு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொது வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு தொ.மு.ச. மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் ராமதாஸ், டி.டி.எஸ்.எப். பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக தொ.மு.ச. மாநில துணைத்தலைவர் சவுந்தர்ராமன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன் ஆகியோர் கலந்துகொண்டு வருகிற 28,29-ந் தேதிகளில் மத்திய அரசின் மக்கள், தொழிலாளர் விரோத விவசாயிகளுக்கு எதிரான போக்கை கண்டித்து பொது வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப், எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப் உள்பட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்