தலித் விடுதலை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தலித் விடுதலை இயக்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தலித் விடுதலை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலித் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ஜெயக்கொடி தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெ.வேதமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
மாநில பொதுச் செயலாளர் கதிர்காமன் தொடக்க உரையாற்றினார். மாநில தலைவர் சசிகுமார் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.