தொரப்பாடி பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

தொரப்பாடி பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.

Update: 2022-03-23 12:18 GMT
வேலூர்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் வட்டார வளமையம் (வேலூர் புறநகர்) சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் தொரப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  நடைபெற்றது. முகாமிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அருட்செல்வி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயன்முறை பயிற்றுனர் பார்த்தசாரதி, வட்டார கல்வி அலுவலர் பிரபாகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் 175 பேர் கலந்து கொண்டனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 5 டாக்டர்கள் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு குழந்தைகளின் மாற்றுத்திறனை மதிப்பீடு செய்தனர். இதில், 13 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 12 பேரின் அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டது. அதைத்தவிர உதவி, பராமரிப்புத்தொகை, உபகரணங்கள் கேட்டு 50-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இதில், மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, சிறப்பு பயிற்றுனர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்