41762 பயனாளிகளுக்கு ரூ174 கோடி கடன் தள்ளுபடி

41762 பயனாளிகளுக்கு ரூ174 கோடி கடன் தள்ளுபடி

Update: 2022-03-23 12:06 GMT
திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின்  இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பின்படி 5 பவுனுக்கு  உட்பட்ட நகைக்கடன்களை  சில தகுதிகளின் கீழ் தள்ளுபடி செய்யலாம் என்ற ஆணைப்பிறப்பித்துள்ளார். அதன்படி  கோவை மற்றும் ஈரோடு  மாவட்ட  மத்திய  கூட்டுறவு வங்கி கிளைகள்,  நகர கூட்டுறவு  வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கங்கள், மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கங்கள்ஆகிய  நிறுவனங்களில் 5 பவுனுக்கு  உட்பட்டு கடன் பெற்று அனைத்து  தகுதிகளையும் நிறைவு செய்துள்ள  41,762 பயனாளிகளுக்கு  ரூ.174 கோடியே  11 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.  எனவே இப்பட்டியலில்  உள்ள நகைக்கடன்  பெற்றுள்ள பயனாளிகளுக்கு  தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.  மொத்த எடை  5 பவுனுக்கு உட்பட்டு   கடன் பெற்றுள்ள தகுதி உடைய பயனாளிகள் சம்பந்தபட்ட கூட்டுறவு  சங்கத்தை அணுகி  கடன் தள்ளுபடி  சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்