விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-03-23 12:00 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள ஏ.என். குப்பம் காலனியை சேர்ந்தவர் சேகர் என்கிற ராஜசேகர் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவருக்கு ரீனா (31) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வேலைக்கு ஏன் போகவில்லை என மனைவி கேட்டதால் கடந்த 14-ந் தேதி வீட்டில் தனியாக இருக்கும்போது, சேகர் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்