நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி உறுப்பினர்கள் நியமனம்
நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி உறுப்பினர்கள் நியமனம்
ிருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டுக்கு நீதிபதி, உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நுகர்வோர் கோர்ட்டு
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் செயல்படுகிறது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள், நுகர்வோர் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டனர். பல்வேறு மாவட்டங்களில் நீதிபதி மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக காலியாக இருந்தன. ஒரே நீதிபதி கூடுதல் பொறுப்பாக மேலும் சில மாவட்டங்களில் பணியாற்றும் நிலை இருந்தது.
இதனால் நடைமுறை சிக்கல் காரணமாக வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டதுடன், நுகர்வோருக்கு உரிய தீர்வு கிடைக்காமல் சிரமம் ஏற்பட்டது. நீதிபதிகள் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்ற நிலையில் கடந்த ஆண்டு பல்வேறு நுகர்வோர் கோர்ட்டுகளில் விசாரணை நடைபெறவில்லை.
நீதிபதி நியமனம்
கடந்த ஆண்டு நுகர்வோர் கோர்ட்டு நீதிபதிகள் நியமனம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணை மேற்கொண்டு காலிப்பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் 30 நுகர்வோர் கோர்ட்டுகளில் நீதிபதிகள், 55 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் பிறப்பித்துள்ளார்.
திருப்பூர் நுகர்வோர் கோர்ட்டு நீதிபதியாக தீபா, உறுப்பினர்களாக பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமனம் செய்யப்பட்டவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் பொறுப்பு ஏற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.