10 யூனியன் ஆணையாளர்களை அதிரடியாக இடமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 10 யூனியன் ஆணையாளர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-03-23 11:39 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 10 யூனியன் ஆணையாளர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 10 யூனியன் ஆணையாளர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கமுதி கிராம ஊராட்சி ஆணையாளர் ரவி ராமநாதபுரம் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக தணிக்கை கண்காணிப்பாளராகவும், அங்கு பணியாற்றிய பாலசுப்பிரமணியன் பரமக்குடி வட்டார ஊராட்சிக்கும், அந்த இடத்தில் பணியாற்றி வந்த ராஜகோபால் கமுதி கிராம ஊராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 
இதேபேல, கடலாடி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் போகலூர் கிராம ஊராட்சிக்கும், அந்த இடத்தில் பணியாற்றி வந்த ராஜா கடலாடி கிராம ஊராட்சிக்கும், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா ராமநாதபுரம் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் பயிற்சிக்கும் அந்த இடத்தில் ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்த இளங்கோ திருவாடானை கிராம ஊராட்சிக்கும், அங்கு பணியாற்றி வந்த சேவுகப்பெருமாள் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
தேர்தல் பிரிவு
கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த செல்லம்மாள் போகலூர் வட்டார ஊராட்சிக்கும், அங்கு பணியாற்றி வந்த அண்ணாதுரை கடலாடி வட்டார ஊராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்