சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

தூத்துக்குடி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-23 11:31 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே முள்ளக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சந்துரு(வயது 19). இவர், கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 21-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று தூத்துக்குடி பாலவிநாயகர் கோவிலில் வைத்து இவர் திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்