மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள். கலெக்டர் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.;

Update: 2022-03-23 04:29 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமில் 357 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை  வழங்கப்பட்டது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 78 மாற்றுத்திறனாளிகளின் பெயர் பதிவும், 110 புதிய பயனாளிகளுக்கு பதிவும் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2 பேருக்கும், ரூ.20 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர சைக்கிள் 2 பேருக்கும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். 

சீகராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஷியாமளா தீனா,  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், துணை கலெக்டர் தாரகேஸ்வரி, மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்