நெல்லை: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-03-22 23:35 GMT
நெல்லை:
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பால்கதிரவன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் முருகானந்தம், இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர்- பத்மநாபன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக தலைவர் ஆசிரியர் ஆசீர்சார்லஸ் நீல் ஆகியோர் தலைமை தாங்கினா். ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார்.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கனகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாநில செயலாளர் சுப்பு உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்