ஆத்தூர் அருகே பள்ளி மாணவி பலாத்காரம்-வாலிபர் கைது

ஆத்தூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-22 23:32 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் நத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் இளவரசன் (வயது 25). இவர், 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான ஒரு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அந்த மாணவியின் தாய் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகுந்தலா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்