பிளாஸ்டிக்கடை உரிமையாளரிடம் ரூ.35 ஆயிரம் பறித்தவர் கைது
பிளாஸ்டிக்கடை உரிமையாளரிடம் ரூ.35 ஆயிரம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 33). இவர் அந்த பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு, சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகரை சேர்ந்த பூமொழி என்ற முகமது இப்ராகிம் (48) உள்பட 3 பேர் சென்றனர். பின்னர் அசோக்குமாரிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறீர்கள்,இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசில் புகார் செய்யாமல் இருக்க ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு அவரிடம் இருந்து ரூ.35 ஆயிரத்தை பறித்து சென்றனர். இது குறித்து அசோக்குமார் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமொழி என்கிற முகமது இப்ராகிமை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.