மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய ஊழியரின் ஜாமீன் மனு தள்ளுபடி
மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்திய ஊழியரின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சேலம்:
சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டராக இருப்பவர் பொன்பாண்டி. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அவரது அறைக்கு சென்ற கோர்ட்டு ஊழியர் பிரகாஷ் (வயது 37) என்பவர் திடீரென மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த மாஜிஸ்திரேட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிந்து பிரகாசை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.