தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் மறியல் போராட்டம்

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் மறியல் போராட்டம் நடத்தினர்;

Update: 2022-03-22 22:19 GMT
தென்காசி:
தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
தென்காசி மாவட்டத்தில் திருநங்கைகள் பல்வேறு தனியாருக்கு சொந்தமான வீடுகளில் வாடகைக்கு தங்கியுள்ளனர். அந்த வீடுகளின் உரிமையாளர்கள் வீடுகளில் இருந்து அவர்களை காலி செய்ய கூறி வருவதாக கூறப்படுகிறது. எனவே திருநங்கைகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அதில் பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும், அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி நீண்ட நாட்களாக தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்து வந்தனர்.
இந்த மனுக்களுக்கு பதில் எதுவும் கிடைக்காததால் சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் நடைபாதையில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேறாததால் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் மறியல் போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் அங்கிருந்து எழுந்திருக்காமல் கலெக்டரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி அமர்ந்திருந்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் சமாதானமாக பேசி, இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரம் கலெக்டர் அலுவலகத்திற்குள் யாரும் செல்ல முடியவில்லை. இதேபோன்று அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே வரவும் முடியவில்லை.

மேலும் செய்திகள்