ஈரோட்டில் ஊரக வளர்ச்சித்துறையினர் தர்ணா போராட்டம்
ஈரோட்டில் ஊரக வளர்ச்சித்துறையினர் தர்ணா போராட்டம்
ஈரோடு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, அவரை பணி ஓய்வில் செல்ல உத்தரவிட வேண்டும். வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெறும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியறுத்தி பேசினார்.
இந்த போராட்டத்தில் சங்க மாநில துணைத்தலைவர் பாஸ்கர்பாபு, மாவட்ட பொருளாளர் சிவசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துளசிமணி உள்பட ஊரக வளர்ச்சித்துறையினர் பலர் கலந்துகொண்டனர்.