கடையம்: அனுமதியின்றி மரங்களை ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்

அனுமதியின்றி மரங்களை ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2022-03-22 21:56 GMT
கடையம்:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் விளைநிலங்களில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இரவு நேரங்களில் எல்லைபுலி விலக்கில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பல வகை மரங்களை அனுமதி இன்றி ஏற்றி வந்ததற்காக ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோன்று ராஜாங்கபுரம் கிராமத்தில் உரிய அனுமதியின்றி பச்சை மரங்களை ஏற்றி வந்த வாகனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கோவிந்தபேரி கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் உரிய அனுமதி இன்றி தேக்கு மரத்தை வெட்டியதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்