கடையநல்லூர்: நகராட்சி ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்
நகராட்சி ஊழியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்;
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் மேலாளராக (பொறுப்பு) முகமது யூசுப், இளநிலை உதவியாளராக சாமித்துரை ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். சம்பவத்தன்று நகராட்சி அலுவலகத்தில் 2 பேரும் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் அறிவுரையின்படி பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.