மானூர்:
மானூர் அருகே தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் சங்கிலி பூதத்தான் (வயது 21). இவர் எட்டான்குளம் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் மெஷினுக்கு மின்இணைப்பு கொடுத்துவிட்டு மெஷினை இயக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி எறியப்பட்டு மயங்கிய நிலையில் இருந்த சங்கிலிபூதத்தானை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சங்கிலி பூதத்தான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மானூர் போலீசில் சங்கிலிபூதத்தானின் தந்தை சங்கரலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ராமர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.