திசையன்விளை: வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர் கைது
வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர் கைது
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தில்லை (வயது 46). அதே ஊர் சந்திமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 44). இவர்களுக்கு இடையே அரசியல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. தில்லையை பற்றி மாயாண்டி ஊர் வாட்ஸ்-அப் குரூப்பில் அவதூறு தகவலை பதிவிட்டு பரப்பியதாக கூறப்படுகிறது. அதை தில்லை தட்டிகேட்டுள்ளார். அதற்கு மாயாண்டி அப்படிதான் பதிவிடுவேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தில்லை திசையன்விளை போலீசில் மாயாண்டி மீது புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை கைது செய்தார்.