கருங்கல் அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் 10½ பவுன் சங்கிலி பறிப்பு

கருங்கல் அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் 10½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-03-22 20:49 GMT
கருங்கல், 
கருங்கல் அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் 10½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
கருங்கல் அருகே உள்ள மங்கலக்குன்றை அடுத்த மாங்கன்றுவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாபு அகில். இவருடைய மனைவி மேரி ஸ்டெல்லா (வயது 34). இவர் பாலூர் காக்கச்சிவிளை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். 
நேற்று மதியம் மேரி ஸ்டெல்லா கடையில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முட்டை வேண்டும் என கேட்டார். உடனே அவர் முட்டையை எடுத்து பொட்டலம் போடும் போது, மர்ம நபர் மேரி ஸ்டெல்லாவின் கழுத்தில் கிடந்த 10½ பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.
போலீசார் விசாரணை
இதுபற்றி மேரி ஸ்டெல்லா கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடை அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். 
பட்ட பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்