கொல்லங்கோடு நகராட்சியில் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு ‘சீல்’

கொல்லங்கோடு நகராட்சியில் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2022-03-22 20:36 GMT
கொல்லங்கோடு, 
கொல்லங்கோடு நகராட்சியில் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
வாடகை செலுத்தாத...
கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட நித்திரவிளையில்  காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தைக்குள் கடை நடத்தி வரும் 2 பேர் கடந்த 6 மாதங்களாக நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தனர்.  நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கடை உரிமையாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் நகராட்சி ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் நித்திரவிளை போலீசார் உதவியுடன் சந்தைக்கு சென்றனர். அங்கு வாடகை பாக்கி வைத்திருந்த 2 கடைகளையும் பூட்டி  ‘சீல்’ வைத்தனர். இதனால் சந்தையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்