கர்நாடகத்தில் காபி விவசாயிகளுக்கு மின்சார மானியம்-பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகத்தில் காபி விவசாயிகளுக்கு மின்சார மானியம் வழங்கப்படும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்

Update: 2022-03-22 20:34 GMT
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் அப்பச்சு ரஞ்சன், ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் ஏ.டி.ராமசாமி ஆகியோர், காபி விவசாயிகள் குறித்த பிரச்சினையை எழுப்பினர். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காபி தோட்ட விவசாயிகள், மின் கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டி இருப்பதால் அவர்கள் பாதிக்கப்படுவதாக இங்கே பேசிய உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். கர்நாடகத்தில் மின்சார மானியம் ஆண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. 

அதனால் மேலும் மின் மானியம் வழங்குவது கடினம். பருவம் தவறாமல் மழை பெய்துவிட்டால் காபி விவசாயிகளுக்கு பிரச்சினை இருக்காது. 10 எச்.பி. மின் மோட்டார் பயன்படுத்தும் காபி விவசாயிகளுக்கு மின்சார மானியம் வழங்கப்படும். இது தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்