சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-03-22 20:27 GMT
தாமரைக்குளம்:

பாலியல் பலாத்காரம்
அரியலூர் மாவட்டம் வடக்கு பரணம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜின் மகன் அன்பு என்ற அன்புராஜ்(வயது 24). பொக்லைன் எந்திர ஆபரேட்டரான இவர், வேலைக்காக சென்ற இடத்தில் கடந்த 4.8.2020 அன்று 16 வயது சிறுமி ஒருவரிடம்‌ ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசில் அந்த சிறுமி புகார் அளித்தார். அதன்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அன்புராஜை கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தம் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பலாத்காரம் செய்த அன்புராஜுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அன்புராஜை சிறையில் அடைக்க பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்