புகார் பெட்டி

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்;

Update: 2022-03-22 20:17 GMT
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதார சீர்கேடு 
மதுரை மாவட்டம் செல்லூர் 50 அடி ரோட்டில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டது. தூர்வாரப்பட்ட குப்பைகளை சாலையின் ஓரமாக கொட்டப்பட்டது. இந்த குப்பைகள் அகற்றப்படமால் உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தேங்கிய குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கிய குப்பைகளை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள்,செல்லூர்.
அங்கன்வாடி மையம் திறக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோப்பூரில் அங்கன்வாடி மையம் பயன்பாடிற்கு திறக்கப்படாமல் உள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூட்டி கிடக்கும் அங்கன்வாடி மையத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முனியான்டி, காரியாபட்டி
நோயாளிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் உள்ளது. இந்த ஆஸ்பத்திரி குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கப்படுவதில்லை. இதனால் சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் நீண்ட நேரம் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு சிலர் அவசர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை நாடி செல்கின்றனர். இதனால் நேரமும், பணமும் விரயமாகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சேகர், இருமணி.
நிழற்குடை தேவை 
மதுரை ஆரப்பாளையம்-மாட்டுத்தாவணி செல்லும் சாலையில் உள்ள மில்கேட் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை இடித்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நிழற்குடை வசதி இல்லாததால் பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வெயில், மழைக்காலங்களில் பஸ்சிற்காக காத்திருப்போர் அருகில் உள்ள கடைகளில் தஞ்சமடைகிறார்கள். எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?                         கிருஷ்ணா, மதுரை.
நாய்கள் தொல்லை 
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் இங்கு அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
கோமதி, தாயில்பட்டி. 

மேலும் செய்திகள்