மாவட்டத்தில் பரவலாக மழை
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூர்
கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை மிதமான மழை பெய்தது.
குறிப்பாக கரூர், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், சுங்ககேட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நொய்யல்
இதேபோல, நொய்யல், மரவாபாளையம், குறுக்குச்சாலை, அண்ணாநகர், அத்திப்பாளையம், புன்னம்சத்திரம், புன்னம், சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், வடுகபட்டி, ஓலப்பாளையம், ஒரம்பபாளையம், நல்லிக்கோவில், கொங்குநகர், மூலிமங்கலம், குறுக்கு பாளையம், பழமாபுரம், பசுபதிபாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, பேச்சிப்பாறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகளூர், பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை மிதமான மழை பெய்தது. அதிக வெயிலின் காரணமாக விவசாயிகள் பயிரிட்டிருந்த பணப்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இந்த மழையால் பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.