பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-22 19:26 GMT
கரூர்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ரகு தலைமை தாங்கினார். ஜெயராஜ் வரவேற்றார். தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாநில பொருளாளர் அப்துல் ரஜாக் சிறப்புரை ஆற்றினார். இதில் ஆரோக்கியராஜ், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்