ரெயில் பெட்டியில் 10 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது

ரெயில் பெட்டியில் 10 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது

Update: 2022-03-22 19:05 GMT
திருச்சி, மார்ச்.23-
திருச்சி ஜங்ஷனில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வந்த ரெயில் ஒன்றின் பெட்டியில் பயணிகள் யாராலும் உரிமைக்கோரப்படாத வெள்ளைநிற பாலித்தீன் பையை எடுத்து சோதனை செய்தபோது அதில் 10 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.38,500 ஆகும். பின்னர் அவற்றை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பொறுப்பு அதிகாரியான சுரேஷ்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ரெயிலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்