குடிசை தீயில் எரிந்து நாசம்

குடிசை தீயில் எரிந்து நாசம்

Update: 2022-03-22 18:59 GMT
உப்பிலியபுரம், மார்ச்.23-
உப்பிலியபுரத்தை அடுத்த மங்கப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியக்காள் (வயது 65). இவரது குடிசையில் நேற்றுமுன்தினம் இரவு தீப்பிடித்தது. பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டு இருந்த பெரியக்காள் தனது வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயைஅணைக்கமுயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்துஅணைத்தனர். எனினும் இந்த விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

மேலும் செய்திகள்