சமயபுரமாரியம்மன் கோவில் திருவிழா

தேவகோட்டையில் சமயபுரமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-03-22 18:56 GMT
காரைக்குடி,

தேவகோட்டையில் உள்ள சமயபுரமாரியம்மன் கோவிலில் பங்குனி  திருவிழா கடந்த 15-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மாலையில் அம்மனுக்கு 16 வகை அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை ஒத்தக்கடை தி.ஊரணி கைலாச விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து வந்தும், சில பக்தர்கள் அலகு குத்தியும் கோவிலுக்கு வந்தனர். கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்