தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்லில் தண்ணீர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நாமக்கல்:-
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரின் தரத்தை களநீர் தரப்பரிசோதனை பெட்டி மூலம் பரிசோதனை செய்யும் செயல்முறை விளக்கமும் கலெக்டர் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது. மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் களநீர் தரப்பரிசோதனை பெட்டி வழங்கப்பட இருப்பதாகவும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தண்ணீரின் தரத்தினை பரிசோதனை செய்ய இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.