நாமக்கல்லில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் நேற்று 4,800 மூட்டை பருத்தி ரூ.1½ கோடிக்கு ஏலம் போனது.

Update: 2022-03-22 18:55 GMT
நாமக்கல்:-
நாமக்கல்லில் நேற்று 4,800 மூட்டை பருத்தி ரூ.1½ கோடிக்கு ஏலம் போனது.
பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஏலம் நடந்தது.
ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 4,800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.
ரூ.1.60 கோடிக்கு விற்பனை
இந்த பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 60 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 450 முதல் ரூ.11 ஆயிரத்து 612 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.10 ஆயிரத்து 350 முதல் ரூ.12 ஆயிரத்து 121 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 491 முதல் ரூ.8 ஆயிரத்து 300 வரையிலும் ஏலம் போனது.
இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.
எள் ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி, ஏலம் நடந்தது. பி.டி. ரகம் குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரத்து 879 முதல் ரூ.11 ஆயிரத்து 99 வரை ஏலம் போனது. மொத்தம் 150 மூட்டைகள் ரூ.4 லட்சத்துக்கு ஏலம் போனது. கருப்பு எள் கிலோ ரூ.126.40 முதல் ரூ.136.40 வரையிலும், சிகப்பு எள் கிலோ ரூ.106.90 முதல் ரூ.132.30 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.126.90 முதல் ரூ.130.90 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 80 மூட்டைகள் ரூ.6 லட்சத்துக்கு ஏலம் போனது.

மேலும் செய்திகள்