சரக்கு ஆட்டோ மோதி பெண் சாவு

வெண்ணந்தூர் அருகே சரக்கு ஆட்டோ மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-22 18:55 GMT
வெண்ணந்தூர்:-

வெண்ணந்தூர் பேரூராட்சி நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி தங்கம்மாள் (வயது 67). இவர், நேற்று மாலை ஆட்டையாம்பட்டியில் இருந்து வெண்ணந்தூர் நோக்கி நடந்து சென்றார். மின்னக்கல் பிரிவு அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ தங்கம்மாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்த தங்கம்மாளை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தங்கம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கம்மாள் மீது மோதிய சரக்கு ஆட்டோ குறித்து விசாரணை  செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்