வம்பனில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2022-03-22 18:52 GMT
திருவரங்குளம்:
திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் ஒவ்வொரு நாளும் மண்டகப்படி தாரர்கள் சார்பில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம்,  சிவகங்கை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரிமளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் 3 இடங்களை பெற்று வெற்றிபெற்ற மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகளுக்கு பரிசுகள் மற்றும் சிறப்பு பரிசுகள், கொடி பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தயம் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் திருவரங்குளம் கேப்பரை வரை நடைபெற்றது. பந்தயத்தை திரளானவர்கள் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாஞ்சான் விடுதி கொத்தகோட்டை ஊராட்சி பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்