உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு பூஜை

உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு பூஜை

Update: 2022-03-22 18:50 GMT
திருச்சி, மார்ச்.23-
உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சி அம்மா மண்டபத்தில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. சென்னை, அம்பத்தூர் புவனேஸ்வரி பீடத்தை சேர்ந்த பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் இதில் கலந்துகொண்டு பெரிய அளவிலான வலம்புரி சங்கில் காவிரி தண்ணீரை பிடித்து வைத்தபடி சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனை நடத்தினார். இந்த பூஜைகள் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது. காவிரியில் தண்ணீர் எந்தவித தங்கு தடையுமின்றி தொடர்ந்து வரவும், நிலத்தடி நீர் குறைந்து வரும் நிலையில் காவிரியில் தண்ணீர் வற்றாமல் ஓடவும் இதன் மூலம் பொது மக்களின் குடிநீர் பஞ்சம் தீர்க்கவும், விவசாயிகள் விவசாயம் செய்யவும் வேண்டி இந்த பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கு பின்னர் சுமங்கலி பெண்களுக்கு வலம்புரி சங்கில் இருந்த தீர்த்தங்களை பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்