திருவண்ணாமலையில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு
திருவண்ணாமலையில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகனும் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 92). இவரது மகன் நாராயணமூர்த்தி (38).
இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக நேற்று வடிவேல் உயிரிழந்தார்.
இதுபற்றி நாராயணமூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.