திருவண்ணாமலையில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலையில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

Update: 2022-03-22 18:48 GMT
திருவண்ணாமலை

அக்னி ஸ்தலம் என்று சொல்வதற்கு ஏற்ப திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. 

இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் கையில் குடையுடனும், வாகனங்களில் சென்றவர்கள் துணியால் முகத்தை மூடிய படியும் சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் மழை பெய்தது. நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் போக, போக பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியது.

 திருவண்ணாமலையில் நேற்று 100.2 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். 

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அக்னி நட்சத்திர சமயத்தில் வெயில் எப்படி இருக்குமோ என்று பொதுமக்கள் இப்போதே அச்சத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்